web 1
web 2
Untitled-1
previous arrow
next arrow

ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 

2026 கார்த்தினை 05, 06

முழுமையான ஆய்வுக்கட்டுரை கோரல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையானது கந்தையா கார்த்திகேசு அறக்கொடை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டை கடந்த ஆறு ஆண்டுகளாக நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டு கார்த்திககைத் திங்களில் ஏழாவது மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்படி மாநாட்டை முன்னிட்டு, வடக்குமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கிடையே (மேற்பிரிவு – உயர்தர வகுப்பு) நடத்தப்படவுள்ள தமிழறிவு வினாவிடைப் பரீட்சையின் ஆயிரம் வினாவிடை அடங்கிய மென்பிரதித்தொகுதியினைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘தமிழாயிரம் வினா விடைத் தொகுதி’ என்ற இணைப்பை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம்.

அன்புடையீர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் நடாத்தப்படவுள்ள ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டிற்கான முழுமையான ஆய்வுக்கட்டுரை அனுப்புவதற்கான கால எல்லை 20.08.2026 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

நன்றி

தலைவர், தமிழ்த்துறை

12 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2027ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் 12ஆவது மாநாடு 2027ஆம் ஆண்டு இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது என்று உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் (ஐக்கிய அமெரிக்கா) இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்கள்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழி அமைப்பும் இணைந்து 09.08.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடாத்திய தனிநாயக அடிகள் நினைவரங்கத்தில் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் விடுத்தார்.
அச்சு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அத்தகவல் தவறுதலாக 11ஆவது மாநாடு என்று வெளியாகிக் கொண்டிருப்பதை அவதானிக்கமுடிகிறது. அதனை 12 ஆவது மாநாடு என்று அறிவிப்பதே சிறப்பானதாகும் என்பதை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.


* பேராசிரியர் செல்வி செ.சிவசுப்பிரமணியம்
( தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் )
* முனைவர் திருமதி அருட்செல்வி கிருபைராஜா
( தலைவர், யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் )
* திரு யோகேந்திரன் நிவேதன்
( பெருந்தலைவர், தமிழி அமைப்பு, இலங்கை )