
ஆக்க இலக்கியமும் அறிவியலும்
ஆக்க இலக்கியமும் பிற சமூக அறிவியல் துறைகளும் பற்றிய கருத்தரங்கிற் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு, யாழ்ப்பாண வளாகத் தமிழ்த்துறை வெளியீடு - I, 1977 பதிப்பாசிரியர்: பேராசிரியர். அ. சண்முகதாஸ்

நாவலர் நூற்றாண்டு மலர்
நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் நூறாவது குருபூசையின் நினைவாக 1979 ஆம் ஆண்டு மார்கழி மாதம் வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர் க. கைலாசபதி

சங்க இலக்கிய ஆய்வுகள்
க. கைலாசபதி நினைவுக் கருத்தரங்குக் கட்டுரைகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய கைலாசபதி நினைவுக் கருத்தரங்கிற் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு, தேசிய கலை இலக்கியப் பேரவை, 2002, தொகுப்பாசிரியர்: பேராசிரியர். அ. சண்முகதாஸ், முதுநிலைத் தமிழ்ப் பேராசிரியர், கலைப்பீடத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்
கருத்தரங்கக் கட்டுரைகள், தமிழ்த்துறை வெளியீடு - 2, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை, 1980, பதிப்பாசிரியர்: கார்த்திகேசு சிவத்தம்பி

தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள்
பேராசிரியர். அ. சண்முகதாஸ் (சிரேஷ்ட பேராசிரியர், தமிழ்த்துறை, பீடாதிபதி, உயர் பட்டப்படிப்புக்கள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு), 2001, பதிப்பாசிரியர்கள்: கலாநிதி. எஸ். சிவலிங்கராஜா, செல்வி. செ. சிவசுப்பிரமணியம், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

விபுலாநந்த அடிகளார் (நூற்றாண்டு விழா - சிறப்பு வெளியீடு)
ஆய்வுக்கட்டுரைத் தொகுதி, தமிழ்மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், 1992, தொகுப்பாசிரியர்: பேராசிரியர். கி. விசாகரூபன், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

தமிழோசை
வெளியீடு: தமிழ்மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை, 1986, பதிப்பாசிரியர்: திரு. பொ. செங்கதிர்ச்செல்வன், சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

தமிழோசை
வெளியீடு: தமிழ்மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை, 1987, பதிப்புக்குழு: சு.சுகந்தி, சு. கோகுலதாசன், பொ. அருந்தவநாதன், பொ. செங்கதிர்ச்செல்வன்

தமிழோசை
வெளியீடு: தமிழ்மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை, 1988, 1989.

தமிழோசை
வெளியீடு: தமிழ்மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இலங்கை, 1999, (யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெள்ளிவிழாச் சிறப்பிதழ்)

தமிழமுது
மாணவர் வெளியீடு, தமிழியற்கழகம், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – 2018

சிறுவர் செந்தமிழ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது மீள்பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர். ம. இரகுநாதன், தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

திருவாதவூரடிகள் புராணம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது மீள்பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர். ம. இரகுநாதன், தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

தஞ்சைவாணன் கோவை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது மீள்பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர். ம. இரகுநாதன், தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளையின் யாழ்ப்பாண வைபவ கௌமுதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது மீள்பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர். ம. இரகுநாதன், தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

தமிழ்ப்புலவர் சரித்திரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டின்போது மீள்பதிப்புச் செய்து வெளியிடப்பட்டது. பதிப்பாசிரியர்: பேராசிரியர். ம. இரகுநாதன், தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு - 2020 (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் 'வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்' என்னும் கருப்பொருளில் 2020 ஜனவரி 10, 11 இல் நடைபெற்ற முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு. பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் ம. இரகுநாதன், திரு. ஈ. குமரன், திரு. க. அருந்தாகரன்

இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு - 2021 (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன்' 'பன்முக நோக்கில் சங்க இலக்கியம்' என்னும் கருப்பொருளில் 2021 நவம்பர் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு. பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் ம. இரகுநாதன், திரு. ஈ. குமரன்

மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு - 2022 (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன்' 'ஈழத்துத் தமிழியல் மரபும் மாற்றமும்' (இருபதாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது) என்னும் கருப்பொருளில் 2022 ஆகஸ்ட் 03 இல் நடைபெற்ற மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு. பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் ம. இரகுநாதன், திரு. ஈ. குமரன்

நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு - 2023 (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் 'சமூகக் கட்டுமானத்தில் சங்கமருவியகால அற இலக்கியங்கள்' என்னும் கருப்பொருளில் 2023 ஆகஸ்ட் 07, 08 ஆம் திகதிகளில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டின் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பபாக வெளியீடு செய்யப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர். கி. விசாகரூபன், திருமதி. ந. செல்வ அம்பிகை, திரு. த. அஜந்தகுமார், திரு. சி. செரஞ்சன்.

ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு - 2024 (ஆய்வடங்கல்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் 'இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை' என்னும் கருப்பொருளில் 2024 ஐப்பசி 07, 08 ஆம் திகதிகளில் நடைபெற்ற ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டின் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பபாக வெளியீடு செய்யப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர். கி. விசாகரூபன், திருமதி. ந. செல்வ அம்பிகை, திரு. த. அஜந்தகுமார், திரு. சி. செரஞ்சன்.

ஆறாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாடு - 2025 (ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் எஸ்டேற் கந்தையா கார்த்திகேசன் அறக்கட்டளை நிதியத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் 'தமிழ் மொழி, இலக்கியச் செழுமையில் ஆழ்வார் பாசுரங்கள்' என்னும் கருப்பொருளில் 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெற்ற ஆறாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வுமாநாட்டின் ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பபாக வெளியீடு செய்யப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: பேராசிரியர். கி. விசாகரூபன், திரு. ஈ. குமரன், திருமதி. ந. செல்வ அம்பிகை, திரு. த. அஜந்தகுமார், திரு. சி. செரஞ்சன்.

தமிழாயிரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினால் ஏழாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டினை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டு '1000 வினா விடைகளின் தொகுப்பு' வெளியீடு செய்யப்படவுள்ளது. தொகுப்பாசிரியர்கள்: திரு. த. அஜந்தகுமார் (விரிவுரையாளர்), திரு. சி. செரஞ்சன் (விரிவுரையாளர்), செல்வி. ந. சுபாஷினி (தற்காலிக உதவி விரிவுரையாளர்), திருமதி. எம். பீ. எப். பஸ்லா (தற்காலிக உதவி விரிவுரையாளர்)

இலத்திரனியல் கற்றல் தொகுதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினரால், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வெளிவாரியாக முதலாம் வருடம் முதலாம் அரையாண்டில் கலைமாணிப் பட்டப்படிப்புப் (தமிழ்) பயிலும் மாணவர்களின் கற்கைநெறிக்காக 2024 ஆம் ஆண்டு தை மாதம் வெளியிடப்பட்ட இலத்திரனியல் கையேடு. (EX. ATAC 11013: பழந்தமிழ் இலக்கியம் - ஓர் அறிமுகம்) எழுத்தாளர்கள்: பேராசிரியர் கி. விசாகரூபன் (சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை), திரு த. அஜந்தகுமார் (விரிவுரையாளர்), திரு. சி. செரஞ்சன் (விரிவுரையாளர்) மதிப்பீட்டாளர்: பேராசிரியர். வ. மகேஸ்வரன் (வாழ்நாட் பேராசிரியர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

இலத்திரனியல் கற்றல் தொகுதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினரால், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வெளிவாரியாக முதலாம் வருடம் இரண்டாம் அரையாண்டில் கலைமாணிப் பட்டப்படிப்புப் (தமிழ்) பயிலும் மாணவர்களின் கற்கைநெறிக்காக 2024 ஆம் ஆண்டு தை மாதம் வெளியிடப்பட்ட இலத்திரனியல் கையேடு. (EX. ATAC 12013: நவீன தமிழ் இலக்கியம்) எழுத்தாளர்கள்: பேராசிரியர் கி. விசாகரூபன் (சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை), திரு. த. அஜந்தகுமார் மதிப்பீட்டாளர்: கலாநிதி. ம. இரகுநாதன் (மேனாட் தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

இலத்திரனியல் கற்றல் தொகுதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினரால், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வெளிவாரியாக இரண்டாம் வருடம் முதலாம் அரையாண்டில் கலைமாணிப் பட்டப்படிப்புப் (தமிழ்) பயிலும் மாணவர்களின் கற்கைநெறிக்காக 2024 ஆம் ஆண்டு தை மாதம் வெளியிடப்பட்ட இலத்திரனியல் கையேடு. (EX. ATAC 21013: நன்னூலை அடிப்படையாகக் கொண்ட தமிழ் இலக்கணம்) எழுத்தாளர்கள்: பேராசிரியர் செ. சிவசுப்பிரமணியம், திரு. த. அஜந்தகுமார், திரு. சி. செரஞ்சன். மதிப்பீட்டாளர்: பேராசிரியர். அ. சண்முகதாஸ் (வாழ்நாட் பேராசிரியர், தமிழ்த்துறை)

இலத்திரனியல் கற்றல் தொகுதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையினரால், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் வெளிவாரியாக இரண்டாம் வருடம் இரண்டாம் அரையாண்டில் கலைமாணிப் பட்டப்படிப்புப் (தமிழ்) பயிலும் மாணவர்களின் கற்கைநெறிக்காக 2024 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வெளியிடப்பட்ட இலத்திரனியல் கையேடு. (EX. ATAC 22013: ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு) எழுத்தாளர்கள்: திருமதி. ந. செல்வ அம்பிகை (சிரேஷ்ட விரிவுரையாளர்), திரு. சி. செரஞ்சன் (விரிவுரையாளர்) மதிப்பீட்டாளர்: பேராசிரியர். கி. விசாகரூபன் (சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை)
