
சிறப்புக் கருத்துரை நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தமிழியல் கழகத்தின் ஏற்பாட்டில் 30.04.2025 அன்று, பொருளியற்துறை மேனாள் சிரேஷ்ட விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் (இலண்டன்) அவர்கள் ‘மலையக இலக்கியம்: ஒன்றரை நூற்றாண்டு வளர்ச்சி’ என்ற பொருண்மையில் கருத்துரை ஆற்றினார். அத்துடன் அவரது நூல்கள் தொடர்பான அறிமுக நிகழ்வொன்றும் இடம்பெற்றது. இந்நிகழ்வினை தமிழ்த்துறைத்தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் கி.விசாகரூபன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். இவரின் நூல்கள் பற்றிய கருத்துரைகளை திரு. இ. இராஜேஸ்கண்ணன் (முதுநிலை விரிவுரையாளர், சமூகவியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), திரு. த. அஜந்தகுமார் (விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), செல்வி ந. சுபாஷினி (தமிழ் சிறப்புக்களை இறுதியாண்டு மாணவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) ஆகியோரும் வழங்கினர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

சிறப்புக் கருத்துரை நிகழ்வு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தமிழியல் கழகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான, பேராசிரியர் கி. விசாகரூபன் அவர்களின் தலைமையில், பேராசிரியர். மு. பரமசிவம் (ஆய்வுநிலைப் பேராசிரியர், INTI சர்வதேசப் பல்கலைக்கழகம், மலேசியா) அவர்கள் 28.03.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் ‘மலேசியாவில் தமிழ்க்கல்வி’ என்ற தலைப்பில் என்ற பொருண்மையில் கருத்துரையாற்றினார். இந்நிகழ்வில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

சிறப்புக் கருத்துரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தமிழியல் கழகத்தின் ஏற்பாட்டில் 14.03.2025 அன்று, பேராசிரியர். முனைவர். ஓ. முத்தையா (பீடாதிபதி, தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பீடம், காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா) அவர்கள் ‘இந்திய – இலங்கை நாட்டுப்புறவியல் ஆய்வில் புதிய முன்னெடுப்புக்கள்’ என்ற பொருண்மையில் கருத்துரை ஆற்றினார். இந்நிகழ்வினை தமிழ்த்துறைத்தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் கி.விசாகரூபன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். தொடக்கவுரையினை கலைப்பீடாதிபதி பேராசிரியர். சி. ரகுராம் அவர்கள் நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.

கவிதைப் பயிற்சிப்பட்டறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்திசெய்யும் நோக்கில் கவிதைப் பயிற்சிப்பட்டறை 10.03.2025 திங்கட்கிழமை காலை 08.00 முதல் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெற்றது. இதன் வளவாளர்களாக கவிஞர். சோ. பத்மநாதன், சி. ரமேஷ், பா. அகிலன, ந. மயூரரூபன், இ. சு. முரளிதரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தமிழ்த்துறையில் கல்வி பயிலும் 80 மாணவர்கள் வரை கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

சிறுகதைப் பயிற்சிப் பட்டறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆக்கத்திறனை விருத்திசெய்யும் நோக்கிலான சிறுகதைப் பயிற்சிப் பட்டறை 03.03.2025 திங்கட்கிழமை காலை 08.00 முதல் பிற்பகல் 02.00 மணிவரை நடைபெற்றது. இதன் வளவாளர்களாக மூத்த எழுத்தாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களும் மூத்த விரிவுரையாளரும் எழுத்தாளருமான திரு. இ. இராஜேஸ்கண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தமிழ்த்துறையில் கல்வி பயிலும் 100 மாணவர்கள் வரை கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையானது உலகதாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வொன்றினை 21.02.2025 அன்று ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வினை தமிழியற்கழகத்தின் உபசெயலாளர் யோ.நிவேதன் அவர்கள் தலைமையேற்றுத் தொகுத்து வழங்கினார். முதன்மை அதிதியாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்புரைகளை தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் திரு.த.அஜந்தகுமார், திரு.சி.செரஞ்சன் ஆகியோர் வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவர்களின் சிறப்புநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 250 இற்கு மேற்பட்ட மாணவர்களும் – விரிவுரையாளர்களும் இந்நிகழ்விலே கலந்து சிறப்பித்தார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தமிழியல் கழகத்தின் ஏற்பாட்டில் 19.02.2025 அன்று, மேனாள் கிறிஸ்தவ இஸ்லாமிய மேனாள் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.ஜே.வி.சந்திரகாந்தன் அடிகளார் அவர்கள் ’21 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியச் செல்நெறிகளும் மடைமாற்றங்களும் – சில அவதானிப்புகள்’ என்ற பொருண்மையில் கருத்துரை ஆற்றினார். இந்நிகழ்வினை தமிழ்த்துறைத்தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் கி.விசாகரூபன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். பேராசிரியர்கள், விரிவுரையாளர், மாணவர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றார்கள்.
சென்னைச் செந்தமிழ் மன்றம் பொது அறக்கட்டளை வழங்கும் இணையவழிக் கருத்தரங்கு:
“இலங்கையில் கண்ணகி பற்றிய பதிவுகள்”
திரு. ஈஸ்வரநாதபிள்ளை குமரன்
சிரேஷ்ட விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, கலைப்பீடம்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
இலங்கை.
Prof. C. Sivagnanasundram Memorial Lecture
Mr. Easwaranathapillai Cumaran
Senior Lecturer,
Department of Tamil,
Faculty of Arts,
University of Jaffa.
27th of March 2024 at 3.00 pm in the Hoover Auditorium, Faculty of Medicine, University of Jaffna.
Photos:
இணையவழிக் கருத்தரங்கு
சென்னைச் செந்தமிழ் மன்றம் ‘நாடோறும் நன்னூல்’ 23.03. 2024
இணையவழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்
கற்பியல், நம்பியகப்பொருள் : கற்றல், கற்பித்தல் 17.08.2020